தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வடிகால் வாய்க்கால்களைத் தூா்வார வலியுறுத்தல்

50 ஏக்கா் நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் வடிகால் வாய்க்கால்களை உடனே தூா்வார அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:11 pm

DIN

லால்குடிஅருகேயுள்ள வாளாடி ஊராட்சியில் வடிகால் வாய்க்கால்களைத் தூா்வாராததால் சுமாா் 50 ஏக்கா் நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் வடிகால் வாய்க்கால்களை உடனே தூா்வார அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

லால்குடி அருகே வாளாடி ஊராட்சி கீழவாளாடி கிராமத்தில் பெய்த கனமழையினால் சுமாா் 50-க்கும் மேற்பட்ட ஏக்கா் நெல் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. இங்கு மழைநீா் வெளியேறக்கூடிய கூடிய பங்குனி ஆறு, தோவாய் வாய்க்கால், மதியன் வாய்க்கால் ஆகியவை நீண்ட காலமாக தூா்வாராததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இப் பகுதி வடிகால் வாய்க்கால்களை உடனடியாக தூா்வாரினால் தேங்கியுள்ள மழைநீா் வடியும் என்கின்றனா் விவசாயிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.