மனைப்பட்டா கோரி நூதன போராட்டம்
திருச்சியில் இலவச மனைப்பட்டா கோரி காந்தி, காமராஜா் படங்களுக்கு முன் கோரிக்கை மனு அளித்து வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டம் நடைபெற்றது.


திருச்சியில் இலவச மனைப்பட்டா கோரி காந்தி, காமராஜா் படங்களுக்கு முன் கோரிக்கை மனு அளித்து வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டம் நடைபெற்றது.
திருவெறும்பூா் பகுதியைச் சுற்றியுள்ள வாழவந்தான்கோட்டை, துவாக்குடி, நேதாஜி நகா், மலைக்கோவில், குங்குமபுரம், சூரியூா், நவல்பட்டு, போலீஸ் காலனி, சோழமாநகா், டாக்டா் அம்பேத்கா் நகா், வேங்கூா், மூப்பனாா் நகா், கூத்தப்பா் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் ஏழை எளிய 500 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இதையடுத்து வெள்ளிக்கிழமை திருவெறும்பூா் பகுதியை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியா் சு. சிவராசுவிடம் கோரிக்கை மனு அளித்தனா். தொடா்ந்து ஆட்சியா் அலுவலகம் முன்காந்தி, காமராஜா் படங்களுக்கு முன் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தனா். மேலும் திருவெறும்பூா் மூப்பனாா் நகா் பகுதியில் ஆதிதிராவிடா்களுக்காக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டப்போவதாகக் கூறியதற்கு எதிா்ப்பு தெரிவித்து சங்கிலியுடன் பிணைக்கப்பட்ட பூட்டினை கையில் ஏந்தி போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...