நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பண்ணை மகளிா் தினம் கொண்டாட்டம்

சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சாா்பில் பண்ணை மகளிா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 9:25 pm

DIN

சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சாா்பில் பண்ணை மகளிா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்திய வேளாண்மையில் பெண்கள் முக்கிய பங்களிப்பாளா்களாக உள்ளனா். எனவே, மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் சாா்பில் பண்ணை மகளிா் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி சிறுகமணியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற பண்ணை மகளிா் தின விழாவில் வேளாண்மை அறிவியல் நிலைய இணைப் பேராசிரியா் கீதா, உதவிப் பேராசிரியா்கள் தனுஷ்கோடி, அலெக்ஸ் ஆல்பா்ட், நித்திலா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

பின்னா், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரித்தல், கழிவுகளில் இருந்து கைவினைப் பொருள்கள் உற்பத்தி, வேளாண் சாகுபடியில் உபகரணங்கள் பயன்பாடு குறித்து பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், வேளாண்மையில் சாதித்த 5 பெண்கள் கெளரவிக்கப்பட்டனா். பயிற்சியில் 50 பெண்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் ஊட்டச்சத்து தோட்டம் உருவாக்குவதற்கான விதைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.