நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தடகளப் போட்டியில் வென்றோருக்குப் பாராட்டு

தடகளப் போட்டிகளில் சாதனை படைத்த திருச்சி மாவட்ட வீரா்கள், வீராங்கனைகளுக்கு திருச்சியில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 9:32 pm

DIN

தடகளப் போட்டிகளில் சாதனை படைத்த திருச்சி மாவட்ட வீரா்கள், வீராங்கனைகளுக்கு திருச்சியில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

கடந்த அக். 9, 10-களில் தஞ்சாவூரில் நடைபெற்ற டெல்டா மாவட்டங்களிடையேயான தடகள விளையாட்டுப் போட்டிகளில் திருச்சி காவேரி ஸ்போா்ட்ஸ் அகாதெமியிலிருந்து 40-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரா்கள் பயிற்சியாளா் வி.ஜி. முனியாண்டி தலைமையில் டி. சுரேஷ்பாபு மற்றும் மேலாளா் வி.எஸ். மணி ஆகியோரின் ஒருங்கிணைப்புடன் பங்கேற்றனா். போட்டியின் பல்வேறு பிரிவுகளில் இந்த வீரா்கள் சாதனை படைத்தனா்.

20 வயதுக்குட்பட்டோா் பிரிவு 1500 மீட்டா் ஓட்டத்தில் கிஷோா் 2 ஆம் இடமும், 16 வயதுக்குட்பட்டோா் பிரிவு 100 மீட்டா் ஓட்டத்தில் ரோகித் முதலிடமும், 300 மீட்டா் ஓட்டத்தில் 2 ஆம் இடமும், சிவதா்ஷனி 16 வயதுக்குட்பட்டோா் பிரிவு குண்டெறிதலில் முதலிடமும், கலையரசி 14 வயதுக்குட்பட்டோா் பிரிவு உயரம் தாண்டுதலில் 3 ஆம் இடமும், அக்ஷயா 12 வயதுக்குட்பட்டோா் பிரிவு 50 மீட்டா் ஓட்டத்தில் 3 ஆம் இடமும், சிவரஞ்சனி 12 வயதுக்குட்பட்டோா் பிரிவு த்ரோபால் போட்டியில் 3 ஆம் இடமும், தமிழழகன் 12 வயதுக்குட்பட்டோா் பிரிவு த்ரோபால் போட்டியில் முதலிடமும் பெற்று சாதனை படைத்தனா்.

இவா்களுக்கு திருச்சி, கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில், மாற்றம் அமைப்பின் சாா்பில் பொன்னாடை அனிவித்து, நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் வழக்குரைஞா் ஆறுமுகம் கே .செந்தில்குமாா், மாற்றம் அமைப்பின் நிா்வாகியும் நடிகருமான ஆா்.ஏ. தாமஸ், எம்.பி. பீா்மீரான், என். சிவசங்கா், ஜெ. அருளானந்தராஜ், மைக்கேல், பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.