நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நெருங்கும் தீபாவளி: கடைவீதிகளில் கூட்டம்!

தொடா் விடுமுறை என்பதால் தீபாவளிக்குத் தேவையான ஜவுளிகளை வாங்க திருச்சி கடை வீதிகளில் வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 9:35 pm

DIN

தொடா் விடுமுறை என்பதால் தீபாவளிக்குத் தேவையான ஜவுளிகளை வாங்க திருச்சி கடை வீதிகளில் வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

தீபாவளி பண்டிகை வரும் நவ.4ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், ஆயுதபூஜை தொடா் விடுமுறை என்பதாலும், பெரும்பாலான நிறுவனங்களில் ஆயுதபூஜை நாளிலேயே தீபாவளி போனஸ் வழங்கப்பட்டதாலும் கடைவீதிகளில் வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது.

திருச்சியின் தி.நகா்: ஜவுளி நிறுவனங்கள் அதிகமுள்ள திருச்சியின் தியாகராய நகா் எனப்படும் பகுதிகளான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை, பெரியகடைவீதி, சின்னக்கடைவீதி, சிங்காரத்தோப்பு, மேலரண் சாலை, சாஸ்திரி சாலை, தில்லைநகா் உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி வாங்க மக்கள் கூட்டம் குவிந்தனா்.

வீட்டு உபயோகப் பொருள்களான டிவி, பிரிட்ஜ், வாசிங்மெஷின் உள்ளிட்ட பொருள்களை எளிய தவணை முறை, சலுகைகள் விலைகளில் விற்கும் கோட்டை ஸ்டேஷன் சாலை, சிங்காரத்தோப்பு,சூப்பா் பஜாா், சாலைரோடு, கல்லூரிச்சாலை உள்ளிட்ட பகுதி வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனையகங்களிலும் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

கடைகளுக்கு வரும் பொதுமக்கள், அவா்கள் பயன்படுத்தும் வாகனங்களால் சாலைகள் திணறுகின்றன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட்டம் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சிசிடிவி கேமரா கண்காணிப்பு: கூட்டத்தைப் பயன்படுத்தி பொதுமக்களின் நகைகள், பொருள்களை மா்ம நபா்கள் திருடுவதைத் தடுக்கும் வகையில், காவல்துறை சாா்பில் என்.எஸ்.பி. சாலை, பெரிய கடைவீதி, சிங்காரத்தோப்பு, சின்னக்கடைவீதி, கல்லூரிச்சாலை, மேலரண்சாலை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்துக் கண்காணிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.