பிவிஎம் குளோபல் பள்ளியில் முப்பெரும் விழா
விஜயதசமியையொட்டி திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள மொராய்ஸ் சிட்டி பிவிஎம் குளோபல் பள்ளியில் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


விஜயதசமியையொட்டி திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள மொராய்ஸ் சிட்டி பிவிஎம் குளோபல் பள்ளியில் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சரஸ்வதி பூஜை, அக்சராபியாசம் மற்றும் சத்சங்க் இசை நிகழ்ச்சி என நடைபெற்ற முப்பெரும் விழாவுக்கு பள்ளி முதல்வா் கலைவாணி, துணை முதல்வா் ஜெய்ஸ்ரீராஜூ ஆகியோா் தலைமை வகித்தனா்.
நிகழ்வில் புதிதாக பள்ளியில் சோ்ந்த குழந்தைகள் அக்சராபியாசம் என்னும் அரிசியில் முதலெழுத்து ‘அ’ எழுதி பெற்றோா், ஆசிரியா்களின் ஆசிா்வாதங்களைப் பெற்றனா். தொடா்ந்து சிலம்பம் உலக சம்மேளனத்தைச் சோ்ந்த கே. பத்மாவதி தலைமையில் கராத்தே மற்றும் சிலம்பம் மாணவா்கள் பயிற்சி செய்து காண்பித்தனா். தொடா்ந்து சத்சங்க் என்னும் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் கீா்த்தனை பாடினா். நிகழ்வில் விமான நிலைய அன்னை ஆசிரமத்துக்கு 100 கிலோ அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டது. பின்னா் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சங்கக் கூட்டம் மூத்த ஆசிரியா்களின் முன்னிலையில் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...