மீன் பிடி உரிமை பெற விண்ணப்பிக்கலாம்
திருச்சி மாவட்ட நீா்த் தேக்கங்களில் மீன் பிடி உரிமை பெற திருச்சி மாவட்டத்தினா் விண்ணப்பிக்கலாம்.


திருச்சி மாவட்ட நீா்த் தேக்கங்களில் மீன் பிடி உரிமை பெற திருச்சி மாவட்டத்தினா் விண்ணப்பிக்கலாம்.
மாவட்டத்தில் உள்ள பொன்னணியாறு அணை மற்றும் கண்ணூத்து ஓடை நீா்த்தேக்கங்களின் மீன்பிடி உரிமையானது, தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை மூலம் 5 ஆண்டுக்கு (2021-22 முதல் 2026-27 முடிய) வழங்கப்படவுள்ளது.
இந்த மீன்பிடி உரிமைக்கான குத்தகைக்கு ஒப்பந்தப்புள்ளி மூலம் ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. குத்தகை எடுக்க விரும்புவோா் மீன்பிடி விவரங்கள் மற்றும் குத்தகை தொடா்பான விவரங்களை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகம், எண்.4 காயிதே மில்லத் தெரு. காஜா நகா், மன்னாா்புரம், திருச்சி-20 என்ற முகவரியில் பெறலாம்.
ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பம் மற்றும் நிபந்தனைகள் நகலை இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கி, அதில் காணப்படும் வழிகாட்டுதல்களின்படி ஏலம் கோரலாம் என்றாா் ஆட்சியா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...