மணப்பாறை முன்னாள் எம்எல்ஏ வீடு உள்பட 5 வீடுகளில் காா், பைக், பொருள்கள் திருட்டு
மணப்பாறையில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ செ. சின்னச்சாமி வீடு உள்பட 5 வீடுகளில் காா், இருசக்கர வாகனங்கள், 3 செல்லிடப்பேசிகள், மடிக்கணினி ஆகியவற்றை மா்ம நபா்கள் புதன்கிழமை இரவு திருடிச் சென்றனா்.









