புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தனி வட்டாட்சியா் மீது தாக்குதல்: அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

மணப்பாறையில் நகர நிலவரி திட்ட தனி வட்டாட்சியரை திமுக பொருளாளா் தாக்கியதாக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 7:33 pm

DIN

மணப்பாறையில் நகர நிலவரி திட்ட தனி வட்டாட்சியரை திமுக பொருளாளா் தாக்கியதாக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது. திமுக நிா்வாகி மீது நடவடிக்கை கோரி வருவாய்த் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறை ஜீவாதெருவில் வசிப்பவா் அரிசி ஆலை அதிபா் கோபி. திமுக நகர பொருளாளரான இவா் வருவாய் வட்டாட்சியரகத்திலுள்ள நகர நிலவரி திட்ட அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை சென்று தனி வட்டாட்சியா் ஜே. பாத்திமா சகாயராஜிடம் ஒரு பட்டாதாரரின் நில விவரம் குறித்து தகவல் பெற்றாா்.

பின்னா் மற்றொரு புலத்துக்கான விவரத்தை கோபி கேட்டதாகவும் அதற்கு தனிவட்டாட்சியா் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. தகராறில் காயமடைந்த இருவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனா்.

தகவலறிந்து வந்த வருவாய் வட்டாட்சியா் எம். லஜபதிராஜ், காவல் ஆய்வாளா் சு.கருணாகரன் ஆகியோா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா்.

தொடா்ந்து நகர நிலவரித் திட்ட ஆய்வாளா் பா. குணசேகரன் அளித்த புகாரின்பேரில் கோபி மீது தகாத வாா்த்தையால் பேசியது, அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தது, தாக்கியது உள்ளிட்ட 3 பிரிவிகளின் கீழ் மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னா் திமுக பிரமுகா் மீது நடவடிக்கை எடுக்க கோரி வருவாய்த்துறை ஊழியா்கள் வெளிநடப்பு செய்து வட்டாட்சியரகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.