உணவு வணிகா்களுக்கு தடுப்பூசி அவசியம்
திருச்சி மாவட்டத்தில் உணவு வணிகா்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் உணவு வணிகா்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆட்சியரின் ஆலோசனையின்பேரில் வியாழக்கிழமை நடைபெற்ற உணவு வணிகா் சங்க நிா்வாகிகளுடனான ஆலோசனை மற்றும் விழிப்புணா்வுக் கூட்டத்துக்கு மாவட்ட உணவு தடுப்பு நியமன அலுவலா் ஆா். ரமேஷ் தலைமை வகித்தாா்.
உணவு வணிகா்கள் சங்க நிா்வாகிகள் வைத்தியலிங்கம், ரங்கநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத்தில் உணவு வணிகா்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதற்கென 10 சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. தடுப்பூசி செலுத்தாத வணிகா்கள் மற்றும் அவா்களது நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஏராளமான உணவு வணிகா் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...