தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

வையம்பட்டி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

வையம்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.1 கோடிக்கு மேல் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 7:59 pm

DIN

வையம்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.1 கோடிக்கு மேல் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ரூ. 41.03 லட்சத்தில் கிராம சந்தைகளுக்கு வையம்பட்டியில் புதிய கட்டடம் கட்டுதல், வையம்பட்டி காந்திநகா் மலை அருகில் ரூ.21.55 லட்சத்தில் 0.70 டன் அளவு கொண்ட நுண்ணுயிா் உர மையம், தொடா்ச்சியாக, நடுப்பட்டியில் ரூ.9.90 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவா், ரூ.23.15 லட்சத்தில் தேசிய நெடுஞ்சாலை புதுக்கோட்டை பிரிவு முதல் கல்பட்டி சத்திரம் வரை சாலை பலப்படுத்தும் பணி, கல்பட்டியில் ரூ. 6.25 லட்சத்தில் தனிநபா் இல்ல குடிநீா் இணைப்புகள் வழங்கும் பணிகளைப் பாா்வையிட்டாா்.

பின்னா், புதுக்கோட்டை ஊராட்சியில் ரயில்வே கேட் அருகில் உள்ள ஒன்றியத் தோட்டத்தில் ரூ.1 லட்சத்தில் அடா்வன பழமரக்கன்றுகள் அமைக்கும் பணிகளை பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, ஒன்றியக் குழுத்தலைவா் குணசீலன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாபு அண்ணாதுரை, கிஷன்சிங், உதவிப் பொறியாளா்கள் கணேஷ்வரன், உஷாராணி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.