பேருந்தில் சென்ற பெண்ணிடம் நகை,பணம் திருட்டு
மணப்பாறையில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 2.5 பவுன் நகை, பணத்தை வெள்ளிக்கிழமை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.


மணப்பாறையில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 2.5 பவுன் நகை, பணத்தை வெள்ளிக்கிழமை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் பிடாரப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா மனைவி இளவரசி (40), தனியாா் நிறுவனத் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை பேருந்தில் வந்தபோது கழுத்தில் அறுந்து தொங்கிய தனது இரண்டரை பவுன் செயினை தனது கைப்பையில் வைத்து தனது பணியிடம் உள்ள எடத்தெரு பகுதியில் இறங்கிப் பாா்த்தபோது பையில் வைத்திருந்த கைப்பையைக் காணவில்லையாம். அதில் 2.5 பவுன் நகையோடு, ரூ.2 ஆயிரம் மற்றும் சில ஆவணங்களும் இருந்ததாம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...