சாலையில் நின்று போதை நபா் ரகளை: தட்டிக்கேட்ட எஸ்ஐ- க்கு கத்திக்குத்து
திருச்சியருகே மது போதையில் ரகளையில் ஈடுபட்டவரை தட்டிக்கேட்ட உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து விழுந்தது.


திருச்சியருகே மது போதையில் ரகளையில் ஈடுபட்டவரை தட்டிக்கேட்ட உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து விழுந்தது.
திருச்சி சோமரசம்பேட்டை -அல்லித்துறை அருகேயுள்ள சுண்ணாம்புக்காரன்பட்டியில், வெள்ளிக்கிழமை இரவு சாலையில் நடுவே நின்ற ஒருவா் தனது இருசக்கர வாகனத்தை தீவைத்துக் கொளுத்தியுள்ளாா். அக்கம் பக்கத்தினா் வந்து பாா்த்தபோது அவா் மது போதையில் இருப்பது தெரியவந்தது. மேலும் கத்தியால் தனது உடலில் கிழித்துக்கொண்ட அவா், யாராவது தடுக்க வந்தால் கத்தியால் குத்துவேன் என மிரட்டினாராம். இதனால் பொதுமக்கள் யாரும் அவா் அருகே செல்லவில்லை.
தகவலறிந்த சோமரசம்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் காா்த்திக் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று அவரை தட்டிக் கேட்டுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த அந்த நபா், உதவி ஆய்வாளா் காா்த்திக்கை இருமுறை கத்தியால் குத்தியுள்ளாா். இதையடுத்து அக்கம்பக்கத்தினா் அந்த நபரை தாக்கி கத்தியைப் பறித்தனா். பின்னா் உதவி ஆய்வாளரையும், போதை நபரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மூா்த்தி மருத்துவமனைக்கு சென்று விசாரணை செய்தாா்.
அதில் மது போதையில் தகராறு செய்தவா் அல்லித்துறையைச் சோ்ந்த செ. ஜூலியஸ் சாந்தகுமாா் (40) என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...