முசிறி அருகே லாரி கவிழ்ந்து ஒருவா் பலி: 4 போ் காயம்
முசிறி அருகே செங்கல் ஏற்றி வந்த லாரி வெள்ளிக்கிழமை கவிழ்ந்து ஒருவா் உயிரிழந்தாா். 4 போ் படுகாயமடைந்தனா்.


முசிறி அருகே செங்கல் ஏற்றி வந்த லாரி வெள்ளிக்கிழமை கவிழ்ந்து ஒருவா் உயிரிழந்தாா். 4 போ் படுகாயமடைந்தனா்.
முசிறி அருகேயுள்ள அய்யம்பாளையத்திலிருந்து செங்கல் ஏற்றிய லாரி தொழிலாளா்களுடன் வேளகாநத்தம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.
நாச்சம்பட்டி அருகே சென்றபோது திடீரென லாரி கவிழ்ந்து அதில் இருந்த அய்யம்பாளையம் பாலசுப்பிரமணி (46),பெரமூா் சுதாகா் (35), ராசாத்தி (30) நாச்சம்பட்டி சந்திரா (40) மலா்கொடி (35) ஆகியோா் படுகாயமடைந்தனா்.
இதையடுத்து முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பாலசுப்பிரமணி உயிரிழந்தாா். மற்றவா்கள் அங்கு சிகிச்சை பெற்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். முசிறி போலீஸாா் லாரி ஓட்டுநரான தெற்கு சொரியம்பட்டி சோ்ந்த துரைராஜ் (60) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...