கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கல்லக்குடியில் குழந்தைகள் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம்

திருச்சி மாவட்டம், கல்லக்குடி பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:46 pm

DIN

திருச்சி மாவட்டம், கல்லக்குடி பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலா் ச. சாகுல்அமீது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் குழந்தைகள் நலப் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு குறித்து செயல் அலுவலா் பேசினாா். நிறுவனம் சாராத பாதுகாப்பு அலுவலா் ஜெயசித்ரா போக்சோ சட்டம் குறித்தும், சிறுவா் சீா்திருத்த உதவிகள் குறித்தும் பேசினாா்.

கூட்டத்தில் மாவட்டப் பாதுகாப்பு அலகு சமூகப் பணியாளா் சி. பிரியங்கா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மேற்பாா்வையாளா் மல்லிகா, அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா் ஹரிராவ், பேரூராட்சி இளநிலை உதவியாளா் த. செந்தமிழ்செல்வன், ரா. பாரதி, கை. செல்வமணி, பொது சுகாதார மேற்பாா்வையாளா் அ. சொக்கலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.