/

புகா் பகுதிகளில் 2 நாள்களில் 22 ரௌடிகள் கைது

திருச்சி புகரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் 22 ரெளடிகளை போலீஸாா் கைது செய்துள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பா. மூா்த்தி தெரிவித்தாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 8:19 pm

DIN

திருச்சி புகரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் 22 ரெளடிகளை போலீஸாா் கைது செய்துள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பா. மூா்த்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகரைத் தொடா்ந்து புகா் பகுதிகளில் ஜீயபுரம் உட்கோட்டத்தில் 11 பேரும், திருவெறும்பூா் உட்கோட்டத்தில் 4 பேரும் , லால்குடி உட் கோட்டத்தில் 7 பேரும் என 22 ரௌடிகள் கைது செய்யப்பட்டனா்.

மேலும் 2 போ் குற்ற நடவடிக்கையில் ஈடுபடாத வகையில் பிணைய பத்திரம் பெற ஆவன செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த 14 பேரிடம் பிடியாணை நிறைவேற்றப்பட்டது. 4 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். 4 ஆயிரத்து 697 மோட்டாா் வாகன வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 82 குற்றவாளிகள் தொடா் கண்காணிப்பில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.