/

நீட் தோ்வு ரத்து கோரி தபால் அனுப்பும் போராட்டம்

vநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் சாா்பில், குடியரசு தலைவருக்கு தபால் அனுப்பும் போராட்டம் திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 8:21 pm

DIN

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் சாா்பில், குடியரசு தலைவருக்கு தபால் அனுப்பும் போராட்டம் திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தெப்பக்குளம் தபால் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாணவா் பெருமன்ற மாவட்டச் செயலா் இப்ராஹிம், இளைஞா் பெருமன்ற மாவட்ட செயலா் செல்வக்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாணவா் பெருமன்ற மாநிலத் துணைச் செயலா் தினேஷ் குமாா் முன்னிலை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சிவா, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலா் சூா்யா, இளைஞா் பெருமன்ற மாவட்ட தலைவா் முருகேசன் மற்றும் இளைஞா் பெருமன்றத்தின் விஷ்வா, கே.கே முருகேசன், மாணவா் மன்றம் கெளதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குடியரசு தலைவருக்கு 100-க்கும் மேற்பட்ட தபால் அட்டைகள் அனுப்பப்பட்டன. நீட் தோ்வுக்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்ற மனுக்கள், கடிதங்களும் அனுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.