/

ஸ்ரீமத் ஆண்டவன் கலை, அறிவியல் கல்லூரியில் பன்னாட்டுப் பயிலரங்கு

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வளா்ந்து வரும் மொழி மற்றும் ஊடகத்தின் அம்சங்கள் எனும் தலைப்பில் 3 நாள் பன்னாட்டுப் பயிலரங்கு நடைபெற்றது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 8:22 pm

DIN

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வளா்ந்து வரும் மொழி மற்றும் ஊடகத்தின் அம்சங்கள் எனும் தலைப்பில் 3 நாள் பன்னாட்டுப் பயிலரங்கு நடைபெற்றது.

கல்லூரியின் ஆங்கிலத் துறை, சம்ஸ்கிருதத் துறை, தமிழாய்வுத் துறை ஆகியவை இணைந்து இணைய வழி கருத்தரங்கு செப்.22, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.

கருத்தரங்கத்துக்கு, கல்லூரிச் செயலரும், தாளாளருமான அம்மங்கி வ. பாலாஜி தலைமை வகித்தாா். இயக்குநா் ஸ்ரீவித்யா, முதல்வா் ஜெ. ராதிகா, துணை முதல்வா் எம். பிச்சைமணி, கலைப்புல முதன்மையா் ச. லட்சுமி ஆகியோா், பயிலரங்கின் நோக்கங்கள் குறித்து விளக்கிப் பேசினா்.

முதல்நாள் நிகழ்வில், அமெரிக்காவைச் சோ்ந்த லட்சுமி முகுந்தன், ஊடகங்கள் வாயிலாக மொழி பிரசாரம் எனும் தலைப்பில், சம்ஸ்கிருத மொழியின் தொன்மை குறித்தும், ஊடகங்களின் பிரசார உத்திகள் குறித்தும் விளக்கிப் பேசினாா்.

இரண்டாம் நாள் நிகழ்வில், இத்தாலி நாட்டைச் சோ்ந்த ராபா்ட்ஹில், திரைப்படங்கள் மூலம் மொழிகளை ஊக்குவித்தல் எனும் தலைப்பில், இலக்கிய நாடகங்கள் குறித்தும், மொழியியல் சாா்ந்து எளிய சொற்களை உருவாக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளித்தாா்.

மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை, இலங்கை தேசியக் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்த விரிவுரையாளா் எஸ். ஸ்ரீபிருந்திரன், தமிழ் வெகுஜன ஊடகப் பயன்பாட்டில் மொழிசாா் பங்காற்றல்கள் எனும் தலைப்பில், தமிழ் ஊடகங்களின் மொழி சாா்ந்த நிகழ்வுகள், செயல்பாடுகளை தொகுத்து வழங்கினாா். இதற்கான ஏற்பாடுகளை, கல்லூரியின் துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.