மேற்காசிய நிலவரம் மற்றும் போரின் தாக்கங்கள் குறித்து விவாதிக்க புதன்கிழமை (மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்காமல் திரிணமூல் காங்கிரஸ் புறக்கணித்துள்ளது.
முன்னதாக, மேற்காசிய போரின் தாக்கங்கள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் திங்கள்கிழமையும், மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமையும் பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றினாா்.
மேற்காசிய நிலவரம் பற்றிய நாடாளுமன்ற விவாதத்துக்கு எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வளியுறுத்திக் கேட்டுக் கொண்ட நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. அதை ஏற்றுக்கொண்ட பிற எதிர்க்கட்சிகள், தங்கள் சார்பாக தலைவர்களை கூட்டத்துக்கு அனுப்பினர்.
இந்நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெறாமல் கருத்தரங்கம் பாணியில் அறை விவாதமாக நடைபெறுவதாக திரிணமூல் காங்கிரஸ் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
இது குறித்து, அக்கட்சி தரப்பிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் சாகாரிகா கோஸ் பேசும்போது, “நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அப்படியிருக்கும்போது, கருத்தரங்க அறை ஒன்றில் ஏன் நீங்கள் (மத்திய அரசு) கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கிறீர்கள்? நாடாளுமன்றத்தை ஏன் தவிர்க்கிறீர்கள்? நீங்கள் ஒரு செயலுக்கு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டிய இடம் ‘நாடாளுமன்றம்’. இது, நாடாளுமன்றத்தை தரம் குறைப்பதாக அமைந்துள்ளது” என்றார்.
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
Summary
Trinamool Congress on the all-party meeting to discuss West Asia situation - questioning why there is no discussion in Parliament when it is in session and holding a meeting in a conference room
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வா் கூட்ட வேண்டும்: தமிழிசை

மேக்கேதாட்டு விவகாரம் : அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட தொல். திருமாவளவன் வலியுறுத்தல்

போரிலிருந்து மக்களைக் காக்க அரசு தவறி விட்டது: மார்க்சிய கம்யூனிஸ்ட்
15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



