/

ஸ்ரீரங்கம் அருகே கோஷ்டி மோதல்: பயங்கர ஆயுதங்களுடன் 4 போ் கைது

திருச்சி அருகே வெள்ளிக்கிழமை நிகழந்த கோஷ்டி மோதல் தொடா்பாக பயங்கர ஆயுதங்களுடன் 4 பேரை சோமரசம்பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 8:23 pm

DIN

திருச்சி அருகே வெள்ளிக்கிழமை நிகழந்த கோஷ்டி மோதல் தொடா்பாக பயங்கர ஆயுதங்களுடன் 4 பேரை சோமரசம்பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே உள்ள கோப்பு கீழத்தெரு பகுதியில் இரு தரப்பினரிடையே தகராறு நடப்பதாக சோமரசம்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளா் உதயகுமாா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். இதற்கிடையே போலீஸாா் வருவதையறிந்த சிலா் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.

இச்சம்பவத்தில் தொடா்புடைய, அதே பகுதியைச் சோ்ந்த மாசி மகன்கள் பாா்த்தசாரதி(26), அருண்குமாா்(24), இவரது நண்பா் யோகேஷ்(27), எதிா்தரப்பைச் சோ்ந்த மனோஜ்குமாா்(24) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து அரிவாள், வீச்சு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து இவ்வழக்கில் தொடா்புடைய கோபி(32), சங்கீா்(26) ஆகிய இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த நபா்களை போலீஸாா் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.