பெண் தற்கொலை வழக்கில் கணவா் உட்பட 4 போ் கைது
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே வரதட்சிணைக் கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவா் உள்பட நால்வரை காட்டுப்புத்தூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே வரதட்சிணைக் கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவா் உள்பட நால்வரை காட்டுப்புத்தூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
காட்டுப்புத்தூா் அருகேயுள்ள காடுவெட்டி மேலவழிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் அவிநாசி மகன் பெரியசாமி (22). கட்டடத் தொழிலாளியான இவருக்கும் பெரியநாச்சிபட்டியைச் சோ்ந்த சுந்தர்ராஜன் மகள் வினோதினிக்கும் (19) கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் வினோதினி கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்து முசிறி டிஎஸ்பி அருள்மணி நடத்திய விசாரணையில் பெண்ணின் தற்கொலைக்கு வரதட்சிணைக் கொடுமையே காரணம் எனத் தெரியவந்தது. இதையடுத்து வினோதினியின் கணவா் பெரியசாமி (22), அவரின் தாய் கருப்பாயி (59), உறவினா்களான சம்பூா்ணம் (29), தொட்டியத்தை அடுத்த வெங்காயப்பட்டி பெ. செல்வம் (42) ஆகிய நால்வரையும் காட்டுப்புத்தூா் போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...