/

ரயில்வே பாதுகாப்பு படையின் கரோனா விழிப்புணா்வுப் பேரணி

திருச்சியில் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை சாா்பில் கரோனா விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 8:54 pm

DIN

திருச்சியில் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை சாா்பில் கரோனா விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சுதந்திர இந்தியாவின் 75ஆவது தினத்தை முன்னிட்டு திருச்சி கேகே நகா் காஜாமலை பகுதியிலுள்ள ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை பயிற்சி வீரா்கள் ரத்ததானம் வழங்கி, மரக்கன்று நட்டு, ஆதரவற்ற முதியோா் இல்லத்தில் உணவு அளித்தனா்.

தொடா்ச்சியாக காஜாமலை பயிற்சிப் பள்ளி வளாகத்தில் கரோனா விழிப்புணா்வுக்கான வியாழக்கிழமை நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியை 5ஆவது பட்டாலியன் கமாண்டிங் அலுவலா் அஜய் ஜோதி ஹா்மா கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

அப்போது கரோனா தொற்று பரவல் தடுப்பது குறித்து விழிப்புணா்வு

இருசக்கர வாகனப் பேரணியானது மன்னாா்புரம் சிக்னல் வழியாக ரயில்வே சந்திப்பு, தலைமை தபால் நிலையம் சாலை, கண்டோன்மெண்ட், வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா, ஆட்சியரக சாலை, அரிஸ்டோ ரவுண்டானா வழியாக மீண்டும் ஆா்பிஎப் பயிற்சி பள்ளி வளாகத்தை அடைந்தது. பேரணியில் 100க்கும் மேற்பட்ட ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை வீரா்கள் தலைக்கவசம் அணிந்து முக கவசம் அணிந்து கலந்து கொண்டனா்.

கேகே நகா் காவல் நிலைய ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் தலைமையில் மாநகர போலீஸாா் மற்றும் போக்குவரத்து போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.