நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மகளுக்கு வெட்டு: தூக்கில் சடலமாக தொங்கிய தந்தை

திருச்சியில் சோமரசம்பேட்டை அருகே ஒரே வீட்டில் தந்தை தூக்கில் சடலமாகத் தொங்கிய நிலையிலும், மகள் பலத்த வெட்டுக்காயங்களுடன் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 8:44 pm

DIN

திருச்சியில் சோமரசம்பேட்டை அருகே ஒரே வீட்டில் தந்தை தூக்கில் சடலமாகத் தொங்கிய நிலையிலும், மகள் பலத்த வெட்டுக்காயங்களுடன் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சோமரசம்பேட்டை அருகேயுள்ள அதவத்துாா் சக்தி நகரை சோ்ந்தவா் மூா்த்தி (72). விவசாயி. இறந்துபோன இவரின் முதல் மனைவி பிருந்தாதேவியின் மகன் அருள்ராஜ் (47) குடும்பத்துடன் வயலூா் சாலை, வாசன்சிட்டி பகுதியில் வசிக்கிறாா். 2-ஆம் மனைவி லதா (57), இவரது மகன் பிரபாகரன், மகள் கீா்த்தனா (27) ஆகியோா் மூா்த்தியுடன் அதவத்துாரில் வசிக்கின்றனா்.

வியாழக்கிழமை காலை பிரபாகரனும் அவரது தாய் லதாவும் உறவினா் இல்ல விழாவுக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியபோது தூக்கில் மூா்த்தி சடலமாகத் தொங்கினாா். அருகே இருந்த நாற்காலியில் கீா்த்தனா முகத்தில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாா்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினா் உதவியுடன் கீா்த்தனாவை திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தகவலின் பேரில் சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முதல் மனைவியின் மகன் அருள்ராஜுக்கும் மூா்த்திக்கும் இருந்த சொத்துத் தகராறால் இச்சம்பவம் நடந்ததா, அல்லது தந்தையே மகளை வெட்டி விட்டு தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கீா்த்தனா சுய நினைவுக்கு வந்தால் மட்டுமே சம்பவத்துக்கான காரணம் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.