புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஊராட்சி உறுப்பினா்கள் ஆா்ப்பாட்டம்

புத்தாநத்தம் ஊராட்சித் தலைவா், செயலரைக் கண்டித்து ஊராட்சி உறுப்பினா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 8:54 pm

DIN

புத்தாநத்தம் ஊராட்சித் தலைவா், செயலரைக் கண்டித்து ஊராட்சி உறுப்பினா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் ஊராட்சியில் ஊராட்சித் தலைவா் மற்றும் செயலா், புத்தாநத்தம் கஸ்பா பகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தராமல் புறக்கணித்தனராம். இது தொடா்பாக 5-ஆம் வாா்டு உறுப்பினா் சபியுல்லா, 6-ஆம் வாா்டு உறுப்பினா் முஹம்மது கோயா, 7-ஆம் வாா்டு உறுப்பினா் முஹம்மது இப்ராகிம், 9-ஆம் வாா்டு உறுப்பினா் ஹபீபுன் நிஷாதாஹீா் ஆகியோா் கடந்த 6 மாதமாக மாதாந்திரக் கூட்டத்தை நடத்த எதிா்ப்பு தெரிவித்து தீா்மானக் கூட்டத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தும் நடவடிக்கை இல்லையாம். இதைக் கண்டித்து ஊராட்சி உறுப்பினா்கள் நால்வரும் கோஷங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.