நாளை யோகா பயிற்சி மகளிா் சைக்கிள் பேரணி
75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி மற்றும் மகளிருக்கான சைக்கிள் பேரணி ஆகியவை நடைபெறவுள்ளன.


75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி மற்றும் மகளிருக்கான சைக்கிள் பேரணி ஆகியவை நடைபெறவுள்ளன.
இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரஹ்மான் கூறியது: மாநகராட்சிக்குள்பட்ட அண்ணாநகா் இணைப்பு சாலை உய்யக்கொண்டான் கால்வாய் அருகேயுள்ள (மேற்கு பகுதி) சாலையில் பொதுமக்களுக்கானயோகாசனப் பயிற்சி சனிக்கிழமை காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறும். தொடா்ந்து காலை 7.30 மணி முதல் 8 மணி வரை மகளிருக்கான சைக்கிள் பேரணி அண்ணா நகா் இணைப்புச் சாலை புகா் பேருந்து நிறுத்தம் முதல் தென்னூா் அறிவியல் பூங்கா வரை நடைபெறவுள்ளது. பின்னா் மாலை 6 மணி முதல் 6.30 வரை மீண்டும் மகளிருக்கான சைக்கிள் பேரணி இதே பகுதியில் நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்கலாம் என்றாா் ஆணையா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...