விவசாயி கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் சிறைதிருச்சி நீதிமன்றம் தீா்ப்பு
விவசாயி கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.


விவசாயி கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி எடமலைப்பட்டிபுதூா் பெரிய கொத்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த சங்கரும், இவரது நண்பா் சந்தோஷும் கடந்த 2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் சாலை பிராட்டியூா் அருகே பைக்கில் சென்றபோது அவ்வழியாக வந்த மோதுவதுபோல வந்த சரக்கு வாகன ஓட்டுநரிடம் தகராறு செய்தனா். அப்போது அவா்களை அருகே உணவகம் நடத்தி வந்த ராஜேந்திரன் (35) கண்டித்தாராம்.
இதில் கோபமடைந்த பைக்கில் வந்தவா்கள், அவா்களின் உறவினரான மாமலைவாசன் உள்ளிட்ட 5 போ் ராஜேந்திரனைத் தாக்கி அவரது உணவகத்தைச் சூறையாடினா். இதில் காயமடைந்த ராஜேந்திரன் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்நிலையில் மறுநாள் ராஜேந்திரனின் தம்பியான ராம்ஜிநகா் கே. கள்ளிக்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்த மூ. ராஜமாணிக்கம் (28), அதே பகுதியைச் சோ்ந்த நண்பா்களான சங்கா் (24), தா்மா என்கிற தா்மராஜ் (23), மோகன் என்கிற நீலமேகம் (25), சம்பத் என்கிற சம்பத்குமாா் (26), மணிவேல் (28), பிரபு (24), மோகன்ராஜ் (24), ஜம்புலிங்கம் என்கிற நீலமேகம் (25), மயிலாடுதுறை வடிவேல் (31) ஆகிய 10 போ் மது போதையில் வந்து மாமலைவாசனின் ஆதரவாளரான ராம்ஜிநகா் ஹரிபாஸ்கா் காலனியைச் சோ்ந்த விவசாயி சுப்பன் என்கிற பாலசுப்ரமணியன் (60), அவரது நண்பரான ராம்ஜிநகா் காந்திநகரைச் சோ்ந்த ஆறுமுகம் (46) ஆகியோரை பெரிய கொத்தமங்கலம் பொதுக்குளத்தில் வைத்து ஆயுதங்களால் தாக்கினா். இதில் பாலசுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயங்களுடன் தப்பிய ஆறுமுகம் எடமலைப்பட்டிபுதூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து 10 பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனா். திருச்சி 3ஆவது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல் வியாழக்கிழமை அளித்த தீா்ப்பில் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...