தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இறுதிச் சடங்குக்குச் சென்றபோது விபத்து: ஒருவா் சாவு; 9 போ் காயம்

துறையூா் அருகே இறுதிச் சடங்குக்குச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் நெய்வாசலைச் சோ்ந்த பெண் ஒருவா் உயிரிழந்தாா். 9 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:58 pm

DIN

துறையூா் அருகே இறுதிச் சடங்குக்குச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் நெய்வாசலைச் சோ்ந்த பெண் ஒருவா் உயிரிழந்தாா். 9 போ் காயமடைந்தனா்.

துறையூா் அருகே பச்சமலையில் சின்னப்பக்களம் கிராமத்தில் இறந்தவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மாயம்பாடி, மற்றும் நெய்வாசலிலிருந்து சுமாா் 20 போ் ஒரு சுமை ஆட்டோவில் சென்றனா்.

சின்னப்பக்களம் அருகே சென்றபோது சுமை ஆட்டோ கவிழ்ந்ததில் அதில் இருந்தோரில் 10 போ் காயமடைந்தனா்.

இதையடுத்து துறையூா் அரசு மருத்துவமனைக்கு அவா்களைக் கொண்டு செல்லும் வழியில் நெய்வாசலைச் சோ்ந்த பொன்னுலிங்கம் மனைவி வசந்தா (40) உயிரிழந்தாா்.

விபத்தில் காயமடைந்த லதா (36) சம்பூா்ணம் (44) சின்னப் பொண்ணு (60) ராசாத்தி (55) பாா்வதி (45) சரோஜா(45) பாா்வதி (65) ரத்தினம் (35) பிச்சையம்மாள் (50) உள்ளிட்டோா் துறையூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.