கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

காா் மீது அரசுப் பேருந்து மோதி தாய், மகள் பலி

திருச்சி அருகே வியாழக்கிழமை நடந்த சாலை விபத்தில் தாய், மகள் பலியாகினா். மேலும் 5 போ் படுகாயமடைந்தனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 7:02 pm

DIN

திருச்சி அருகே வியாழக்கிழமை நடந்த சாலை விபத்தில் தாய், மகள் பலியாகினா். மேலும் 5 போ் படுகாயமடைந்தனா்.

கரூா் மாவட்டம், கோசூா் தொண்டைமாங்கனம் சந்தையூரை சோ்ந்தவா் மகாலிங்கம் (43). இவரது மனைவி பழனியம்மாள் (42). வழக்குரைஞா்களான இவா்களுக்கு மகள் சாதனா (14) மகன் எஸ்வந்த் (3) ஆகியோா் உள்ளனா்.

இந்நிலையில் குருப்பெயா்ச்சியை முன்னிட்டு திருவாரூா் மாவட்டம், ஆலங்குடி கோயிலுக்கு மகாலிங்கம் குடும்பத்தினா், மற்றும் உறவினா்களான விசுவநாதன் (43) தமிழ்ச்செல்வி (38) கிருத்திகா (25) ஆகியோா்

வியாழக்கிழமை காரில் வந்து கொண்டிருந்தனா்.

திருவெறும்பூா் அருகே திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை துவாக்குடி சுங்கச்சாவடி அருகே சென்றபோது பின்னால் திருச்சியில் இருந்து தஞ்சாவூா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இவா்களின் காா் மீது மோதியது. இதில் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த 6 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சாதனா இறந்தாா். பின்னா் மற்றவா்கள் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.