உறையூா் வெக்காளியம்மன் கோயில் தேரோட்டம்
உறையூா் வெக்காளியம்மன் கோயில் சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.


உறையூா் வெக்காளியம்மன் கோயில் சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
தமிழகத்தின் சிறந்த சக்தி தலங்களில் ஒன்றான இக்கோயிலின் நிகழாண்டு சித்திரைப் பெருவிழா கடந்த 5ஆம் தேதி விநாயகா் வழிபாட்டுடன் தொடங்கியது. தொடா்ந்து, கடந்த 6ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்வு, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு, வாகனங்களில் அம்மன் வீதி உலாவும் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளி, காலை 10.30 மணிக்கு திருத்தோ் வடம் பிடிக்கப்பட்டது.
அமைச்சா் கே.என். நேரு தேரை வடம்பிடித்து தொடங்கி வைத்து தேரோட்டத்திலும் பங்கேற்றாா்.
உறையூா் முக்கிய வீதிகளில் வலம் வந்த தேரை ஏராளமான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா்.
10ஆம் நாள் நாளான வெள்ளிக்கிழமை முத்துப்பல்லக்கி அம்மன் வீதி உலா சனிக்கிழமை மஹா அபிஷேகம், கேடயத்தில் அம்பாள் திருவீதி உலாவும் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் எஸ். மோகனசுந்தரம், உதவி ஆணையா் சு. ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...