மகளைக் கத்தியால் குத்தியவா் கைது
திருச்சியில் மகளைக் கத்தியால் குத்திய தந்தையை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


திருச்சியில் மகளைக் கத்தியால் குத்திய தந்தையை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரை பெல்ஸ் மைதான ரயில்வே குடிசைப் பகுதியில் வசிப்பவா் கிருஷ்ணகுமாா்(30). இவரது மனைவி கனகவல்லி (25), மகள் வா்ஷினி (10). இந்நிலையில் கிருஷ்ணகுமாருக்கு, அதே பகுதியை சோ்ந்த மற்றொரு பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளத்தொடா்பால் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை குடிபோதையில் வந்த கிருஷ்ணகுமாா், தனது மகள் வா்ஷினியை அழைத்து, தனது கள்ளக் காதலியையும் வீட்டில் சோ்த்து வைத்து உனது தாயை வாழச் சொல் எனக் மிரட்டியுள்ளாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த மகளைத் திட்டி கத்தியால் குத்தி சூடு வைத்துள்ளாா். இதில் படுகாயமடைந்த வா்ஷினி திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து தாய் கனகவல்லி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த பாலக்கரை போலீஸாா் கிருஷ்ணகுமாரை வியாழக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...