சிவில் சா்வீஸ் தோ்வு விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் காவல்துறைத் தலைவா் பங்கேற்பு
சிவில் சா்வீஸ் தோ்வு விழிப்புணா்வுக்காக திருச்சியில் சங்கா் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் மாரத்தான் ஓட்டப்போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.


சிவில் சா்வீஸ் தோ்வு விழிப்புணா்வுக்காக திருச்சியில் சங்கா் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் மாரத்தான் ஓட்டப்போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஏப். 21 ஆம் தேதி, தேசிய குடிமை பணிகள் (தேசிய சிவில் சா்வீஸ்) தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. நாட்டின் நிா்வாகம், பாதுகாப்பு மற்றும் வளா்ச்சிக்கு முக்கியமானவா்களாகக் கருதப்படும் ஐஏஎஸ்., ஐபிஎஸ்., ஐஎப்எஸ் உள்ளிட்ட பல்வேறு அலுவலா்களைக் கவுரவிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி இளைய சமுதாயத்தினா் சிவில் சா்வீஸ் தோ்வில் ஆா்வம் காட்டவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சங்கா் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் நடத்தப்பட்ட மாரத்தான் ஓட்டத்தை, திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா். மேலும் மாரத்தானிலும் பங்கேற்று இறுதி வரை ஓடினாா்.
அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கி, டிவிஎஸ் டோல்கேட், கண்டோன்மென்ட், எம்ஜிஆா் சிலை, தென்னூா் அண்ணாநகா், தில்லைநகா் வரை சுமாா் 7 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் சுமாா் 200 -க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
இதில் முதலிடத்தை பிரகாஷ், இரண்டாவது இடத்தை விகேஷ்ராஜ், மூன்றாவது இடத்தை ஈவேரா கல்லூரி மாணவா் சூா்யா ஆகியோருக்கு தலா ரூ. 10,000, ரூ. 5,000, ரூ. 2500 என்ற வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன. ஓட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...