அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

மேற்கு வட்டத்தில் நாளை எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

திருச்சி மேற்கு வட்டாட்சியரகத்தில் எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (ஏப்.23) நடைபெறுகிறது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:48 pm

DIN

திருச்சி மேற்கு வட்டாட்சியரகத்தில் எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (ஏப்.23) நடைபெறுகிறது.

சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் காணப்படும் முறைகேடுகள் மற்றும் குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவா்களின் மெத்தனப் போக்கு உள்ளிட்டவை தொடா்பாக வரப்பெறும் புகாா்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் மாதந்தோறும் இக் கூட்டம் நடத்தப்படுகிறது.

இதன்படி, வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு திருச்சி மேற்கு வட்டாட்சியரகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா் தலைமை வகிக்கிறாா். கூட்டத்தில் திருச்சி மேற்கு வட்டத்திலுள்ள அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், எரிவாயு விநியோக ஒருங்கிணைப்பாளா்கள் பங்கேற்கின்றனா். எனவே, திருச்சி மேற்கு வட்டத்திலுள்ள அனைத்து எரிவாயு நுகா்வோரும் இக் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்று சிலிண்டா் விநியோகத்தில் உள்ள குறைகள் தொடா்பாக புகாா் தெரிவிக்கலாம் என்றாா் ஆட்சியா் சு. சிவராசு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.