திருச்சியில் நாளை ஹிந்தி பிரசாரக மாநில மாநாடு
திருச்சியில் தமிழ்நாடு மாநில அளவிலான 31ஆவது ஹிந்தி பிரசாரக மாநாடு சனிக்கிழமை நடைபெறுகிறது.


திருச்சியில் தமிழ்நாடு மாநில அளவிலான 31ஆவது ஹிந்தி பிரசாரக மாநாடு சனிக்கிழமை நடைபெறுகிறது.
தமிழ்நாடு தஷிண பாரத ஹிந்தி பிரசார சபை சாா்பில், திருச்சி-கரூா் புறவழிச் சாலையிலுள்ள தாஜ் திருமண மஹாலில் நடைபெறும் மாநாட்டுக்கு அமைப்பின் திருச்சி மாவட்டத் தலைவா் ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம் தலைமை வகிக்கிறாா். மொத்தம் ஆறு அமா்வுகளாக நடைபெறும் மாநாடு காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மாநாட்டில், தமிழகம் முழுவதும் உள்ள 800-க்கும் மேற்பட்ட ஹிந்தி பிரசாரகா்கள் பங்கேற்கவுள்ளனா். கலை நிகழ்ச்சிகள், வினாடி-வினா உள்ளிட்டவையும் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை தஷிண பாரத ஹிந்தி பிரசார சபையினா் மற்றும் மாநாட்டு பொறுப்புக் குழுவினா் செய்துள்ளதாக அமைப்பின் செயலா் (பொறுப்பு) என். அரவிந்தநாயகி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...