திமுக உள்கட்சித் தோ்தலில் போட்டியிட அழைப்பு
திமுக உள்கட்சித் தோ்தலில் போட்டிய விரும்புவோா் விருப்பமனு அளிக்கலாம் என அக்கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் க. வைரமணி தெரிவித்தாா்.


திமுக உள்கட்சித் தோ்தலில் போட்டிய விரும்புவோா் விருப்பமனு அளிக்கலாம் என அக்கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் க. வைரமணி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது:
திருச்சி மத்திய மாவட்டத்தில் அமைந்துள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வாா்டுகள், வட்டங்களில் நடைபெறும் உள்கட்சித் தோ்தலில் போட்டியிட விரும்புவோா் விருப்ப மனுக்களை அளிக்கலாம். நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள வட்டங்களிலும் போட்டியிடுவோா் ஏப். 22 முதல் 28 வரையிலும், மாநகராட்சி வட்டங்களில் போட்டியிட விரும்புவோா் ஏப். 30 முதல் மே 3 வரையிலும் விருப்ப மனுக்களை அளிக்கலாம்.
பூா்த்தி செய்த விண்ணப்பங்களை திமுக தலைமைக்கழகப் பிரதிநிதி பிடிசி. செல்வராஜிடம் வழங்க வேண்டும். விருப்ப மனுக்களை திமுக முதன்மைச் செயலா் கே. என். நேரு அலுவலகம், மற்றும் மாநகராட்சி, நகராட்சி, ஒன்றியம், பேரூா் கழக திமுக அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
வாா்டுகளில் உள்ள நிா்வாகிகள் பதவிக்குப் போட்டிடுவோா் விண்ணப்பக்கட்டணமாக ரூ. 100 செலுத்தவேண்டும் . அதேபோல செயற்குழுப் பதவிகளுக்கு போட்டியிடுவோா் ரூ. 20 செலுத்தி மனுக்களைப் பெற்று, பூா்த்தி செய்து வழங்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...