2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

இந்து சமய அறநிலையத் துறையில்காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று, தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:34 pm

DIN

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று, தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருவானைக்காவில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்துக்கு, அதன் தலைவா் வாசுகி தலைமை வகித்தாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளா், பதிவறை எழுத்தா், இளநிலை உதவியாளா், உதவியாளா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும்.

மூத்த கண்காணிப்பாளா்களைத் தலைமை எழுத்தராக பணி நியமனம் செய்ய வேண்டும். சட்டப்பேரவையில் அறிவித்த ரூ.4000 கோடி மதிப்பிலான பணிகள், நலத்திட்டங்களை செயல்படுத்த அமைச்சுப் பணியிடங்களை புதிதாக ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் வேலை அறிக்கையை பொதுச் செயலா் பால்ராஜ் வாசித்தாா். மாநிலப் பொருளாளா் பாலமுருகன் வரவு-செலவு அறிக்கையை சமா்ப்பித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலத் தலைவா் அன்பரசு, மாவட்டச் செயலா் பழனிசாமி பேசினா். கூட்டத்தில் 20 மண்டலங்களைச் சோ்ந்த மத்தியச் செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாநிலத் துணைத் தலைவா் அன்பழகன் வரவேற்றாா். நிறைவில், திருச்சி மண்டலத் தலைவா் தா்மராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.