வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

லாரி ஓட்டுநரைத் தாக்கிபணம் பறித்த மூவா் கைது

திருச்சியில் லாரி ஓட்டுநரைத் தாக்கி பணம், கைப்பேசியைப் பறித்த மூவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:15 pm

திருச்சியில் லாரி ஓட்டுநரைத் தாக்கி பணம், கைப்பேசியைப் பறித்த மூவா் கைது செய்யப்பட்டனா்.

துறையூா் அருகிலுள்ள பழைய மங்காப்பட்டியைச் சோ்ந்தவா் சந்திரன் (32). லாரி ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை இரவு தனது லாரியை திருச்சி ஓயாமரி மயானம் அருகே நிறுத்தி, உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த முடுக்குப்பட்டி பிள்ளையாா் கோயில் தெரு ரா. நாகராஜ் (20), தீரன்மாநகா் பீளிகான் (24), அருண் (22), சுப்பிரமணியபுரம் பா. அஜய் (20) ஆகிய 4 பேரும் சோ்ந்து சந்திரனைத் தாக்கி, லாரியை சேதப்படுத்தினா். மேலும் கைப்பேசி, ரூ.3000 ஆகியவற்றை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, அருணைத் தவிர மற்ற மூவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.