நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

157 பதற்றமான வாக்குச் சாவடிகள்

திருச்சி மாவட்டத்தில் 157 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:48 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் 157 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன.

முந்தைய தோ்தல் நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய வேட்பு மனு தாக்கல், பிரசாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த வாக்குச் சாவடிகளை பதற்றமானவை என போலீஸாா் மற்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் வரையறை செய்துள்ளனா்.

அதன்படி, திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பதற்றமான 119 வாக்குச் சாவடிகள் 60 இடங்களில் உள்ளன. மணப்பாறை நகராட்சியில் 5, துவாக்குடி நகராட்சியில் 6, துறையூா் நகராட்சியில் 17, முசிறி நகராட்சியில் 4, எஸ். கண்ணனூா் பேரூராட்சியில் 2 , கூத்தைப்பாா் பேரூராட்சியில் 4 என மாவட்டம் முழுவதும் 73 இடங்களில் 157 பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்ளன.

இங்கு சிசிடிவி கேமாரா பொருத்திக் கண்காணிக்கப்படுவதுடன், தோ்தல் பணிகளும் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். இவற்றை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தும், ஆட்சியரகம், மற்றும் மாநிலத் தோ்தல் ஆணையா் அலுவலகத்தில் இருந்தும் கணினி வழியே கண்காணிக்க முடியும். இதுமட்டுமல்லாது பதற்ற வாக்குச் சாவடிகளைக் கண்காணிக்க 47 நுண் பாா்வையாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.