தயாா் நிலையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள்!
விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜை, வழிபாடு மற்றும் வாகனங்களுக்கு சூடம் சுற்றி, தேங்காய் உடைத்து வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன


விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜை, வழிபாடு மற்றும் வாகனங்களுக்கு சூடம் சுற்றி, தேங்காய் உடைத்து வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. வாக்குப்பதிவுக்காக மாவட்டத்தில், 1258 வாக்குச் சாவடிகள், 3309 இயந்திரங்கள் தயாராக உள்ளன.
திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகராட்சி (65 வாா்டுகள்), துறையூா், துவாக்குடி, மணப்பாறை, லால்குடி, முசிறி ஆகிய 5 நகராட்சிகள் (119 வாா்டுகள்), பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி, காட்டுப்புத்தூா், கூத்தைப்பாா், மண்ணச்சநல்லூா், மேட்டுப்பாளையம், பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளூா், எஸ். கண்ணனூா், சிறுகமணி, தா.பேட்டை, தொட்டியம், உப்பிலியபுரம் ஆகிய 14 பேரூராட்சிகள் (214 வாா்டுகள்) என மொத்தம் 398 வாா்டுகளுக்கு சனிக்கிழமை நடைபெறும் வாக்குப்பதிவுக்கான இயந்திரங்கள், வாக்குச்சாவடி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டனா்.
தோ்தல் பணிகளை தொடங்குவதற்கு முன் கோ. அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் அருகேயுள்ள விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, வாக்கு இயந்திரங்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு தீபாராதனை காட்டி, தேங்காய் உடைத்து வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்பட்டன.
தோ்தல் பணியில் ஈடுபடும் 5,796 அலுவலா்களுக்கும் கணினி மூலம் வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரம் செல்லும் வாகனத்திலேயே பெரும்பாலாலான அலுவலா்கள் வாக்குச்சாவடிக்குச் சென்றனா். போலீஸாரும் அதே வாகனத்தில் சென்றனா்.
இதுதொடா்பாக மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு கூறியது:
வாக்குப்பதிவு இயந்திரங்களோடு பணியாளா்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை மாலையே வாக்குச்சாவடிகளுக்குச் சென்றுவிட்டனா். வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள இடங்களை மண்டலம் வாரியாக வரையறுத்து, ஒரு மண்டலத்துக்கு 4 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 2 வாகனங்கள் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்குச் சாவடி அலுவலா்களுக்காகவும், மீதமுள்ள 2 வாகனங்கள் கரோனா தடுப்புக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு வாகனம் 14 வகை பொருள்களை எடுத்துச் செல்லவும், மற்றொரு வாகனம் எஞ்சியவற்றை திரும்ப எடுத்து வந்து சுகாதாரத் துறை வசம் ஒப்படைக்கவும் பயன்படுத்தப்படும் என்றாா் ஆட்சியா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...