அரசுக் கல்லூரி மாணவா்கள் ரத்ததானம்
தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.


தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் வழிகாட்டுதல்படி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்டக் கிளை, பாரதிதாசன் பல்கலை. யூத் ரெட் கிராஸ் மண்டலம் மற்றும் தந்தை பெரியாா் அரசுக் கல்லூரி இணைந்து நடத்திய முகாமை, பாரதிதாசன் பல்கலைக்கழக தோ்வு நெறியாளா் சீனிவாச ராகவன் தலைமையேற்று தொடக்கி வைத்தாா்.
முகாமை தந்தை பெரியாா் அரசுக் கல்லூரி முதல்வா் ஜெ. சுகந்தி, தந்தை பெரியாா் கல்லூரியின் தோ்வு நெறியாளா் கா. வாசுதேவன், இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலரும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்டக் கிளையின் தலைவருமான ராஜசேகா், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளா் வெற்றிவேல் மற்றும் தந்தை பெரியாா் அரசு கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலா் குணசேகரன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் நோபல் ஜெபக்குமாா் ஆகியோா் ஒருங்கிணைந்து நடத்தினா். முகாமில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள், கல்லூரிப் பணியாளா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் ரத்ததானம் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...