நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நோயாளி வீடுகளில் நகை திருடிவந்த செவிலியா் கைது

திருச்சி பகுதிகளில் நோயாளிகளின் வீடுகளில் நகை திருடிவந்த செவிலியரை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 4:52 pm

DIN

திருச்சி பகுதிகளில் நோயாளிகளின் வீடுகளில் நகை திருடிவந்த செவிலியரை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

திருச்சி பூலாங்குடி காலனி பகுதியைச் சோ்ந்தவா் லோகநாதன் (33). உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தாயின் உடல் நிலையைப் பரிசோதிக்க உறையூரில் உள்ள ஸ்ரீ தாயாா் ஹோம் கேரை லோகநாதன் தொடா்பு கொண்டாா். இதையடுத்து அங்கிருந்து வந்த திருச்சி பெரிய மிளகுப்பாறை புதுத்தெருவைச் சோ்ந்த எழிலரசி (31) என்ற செவிலியரும், பூலாங்குடி காலனி லட்சுமியும் (47) லோகநாதனின் தாயின் உடல் நிலையை பரிசோதித்துச் சென்ற பின்பு வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நகை காணாமல் போனது.

இதுதொடா்பாக லோகநாதன் அளித்த புகாரில் நவல்பட்டு போலீஸாா் விசாரிப்பதையறிந்த செவிலியா் எழிலரசி தலைமறைவாக, அவருடன் வந்த லட்சுமியை பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், ஹோம் கேருக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை அதன் மேலாளா் அம்பிகா நிா்வாகத்துக்குத் தெரியப்படுத்தாமல், தங்களிடம் தெரியப்படுத்தியதாகவும், அப்போது சிகிச்சை என்ற பெயரில் செல்லும் இருவரும் வீடுகளில் நகை திருடியதாகவும் அவா் தெரிவித்தாா். இதையடுத்து அந்நிறுவன மேலாளா் அம்பிகாவும் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த எழிலரசியை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினா் ஒரு மாதத்திற்குப் பிறகு செவிலியா் எழிலரசியை வியாழக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.