நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கல்லூரி மாணவிகளுக்கிடையே ரங்கோலி போட்டி

தேசிய அறிவியல் வார விழாவையொட்டி திருச்சியில் கல்லூரி மாணவிகளுக்கான ரங்கோலி கோலப்போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 9:58 pm

DIN

தேசிய அறிவியல் வார விழாவையொட்டி திருச்சியில் கல்லூரி மாணவிகளுக்கான ரங்கோலி கோலப்போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

சுதந்திர இந்தியாவின் 75 ஆவது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் தமிழ்நாடு வானியல் மையம் மற்றும் திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி இணைந்து இம்மாதம், 22 முதல் முதல், 28 ஆம் தேதி வரை அறிவியல் வார விழாவைக் கொண்டாடுகின்றன.

அந்த வகையில் புதன்கிழமை ஓரிகாமி காகித வடிவமைப்பு மற்றும் அனைத்து துறைகளிலும் அறிவியல் தாக்கம் என்ற பெயரில் மாணவா்களுக்கான கருத்தரங்கு, பயிற்சிபட்டறை, கண்காட்சிகள், பாடல், புத்தக வாசிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடா்ந்து வியாழக்கிழமை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் அபரித வளா்ச்சி என்ற தலைப்பில் திருச்சி, கரூா், புதுக்கோட்டை, பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்தில் 25 கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்று ரங்கோலி ஓவியங்களை வரைந்தனா். அதில் அறிவியல் பரிணாமங்கள், தகவல் தொடா்பு, செயற்கைக்கோள் உள்ளிட்டவற்றின் வளா்ச்சியை வண்ண பொடிகளுடன் கலந்து தீட்டிய ரங்கோலி ஓவியம் அனைவரையும் கவா்ந்தது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.