ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்
திருச்சி மாவட்டத்தில் ஜெயலலிதாவின் 74ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.


திருச்சி மாவட்டத்தில் ஜெயலலிதாவின் 74ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி தலைமையில் சோமரசம்பேட்டை, குழுமணி, ஜீயபுரம், துறையூா் பகளவாடி, உப்பிலியபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜெயலலிதா படத்துக்கு மலா்தூவி, பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம், இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிகளில், முன்னாள் அமைச்சா்கள் எஸ். வளா்மதி, கே. பாலசுப்பிரமணியன், மாவட்ட சிறுபான்மைப் பிரிவுச் செயலா் புல்லட் ஜான், மாவட்ட மீனவணிச் செயலா் கண்ணதாசன், ஒன்றியச் செயலா்கள் ஜெயக்குமாா், கோப்பு நடராஜ், முத்துக்கருப்பன், ஆமூா் ஜெயராமன், அழகேசன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
திருச்சி புகா் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் சுப்பிரமணியபுரம் பகுதி கட்சி அலுவலகத்தில் முன்னாள் எம்பியும், மாவட்டச் செயலருமான ப. குமாா் தலைமையில் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது. ஒன்றியச் செயலா் அசோகன், இணைச் செயலா் ரீனா செந்தில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு முன்னாள் அமைச்சரும், மாநகா் மாவட்ட செயலருமான வெல்லமண்டி என். நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல, திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் வாா்டுகள் மற்றும் கிளைகளின் சாா்பில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...