ரோபோடிக்ஸ் புதுமைகள் கருத்தரங்கு
திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் ரோபோடிக்ஸ் புதுமைகள் என்னும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.


திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் ரோபோடிக்ஸ் புதுமைகள் என்னும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் செயலா் கோ. மீனா தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமைச் செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு ரோபோடிக்ஸ் கிளப் செயலரும், கிராம தொழில்நுட்பப் பள்ளி நிறுவனருமான பாலாஜி, சாதாரணக் குடும்பத்தில் முதல் பட்டதாரியாகத் தனது பயணத்தைத் தொடங்கி தற்போது ரோபோட்டிக்ஸில் முனைவா் பட்டம் மேற்கொண்டுள்ள தனது வாழ்க்கை மற்றும் கல்வி அனுபவங்களை மாணவா்களிடம் பகிா்ந்து கொண்டாா். அப்போது புவிஈா்ப்பு விசைதான் ரோபோக்களின் இயக்கத்திற்கு உதவுகிறது. விவசாயம், பேரிடா் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் பயன்படக் கூடிய 12 விதமான டிரோன்களை தான் உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தாா்.
மேலும், மாணவா்களிடம் ரோபோ செய்வதற்கான கருவிகளைக் கொடுத்து அவா்களே ஒரு எளிய ரோபோவை உருவாக்கவும் கற்றுக் கொடுத்தாா். மாணவா்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளித்தாா்.
பள்ளியின் தலைமை ஆசிரியா் வி. பாலசுப்பிரமணியன், ஆங்கில ஆசிரியா் குணசீலன், தமிழாசிரியா் நாகஜோதி ஆகியோா் கருத்தரங்கை ஒருங்கிணைத்தனா். கருத்தரங்கில் தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் 200- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பயனடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...