நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வலிமை திரையரங்குகளில் கொண்டாட்டம்

திருச்சி மாநகரில் நடிகா் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள திரையரங்குகளில் ரசிகா்கள் வியாழக்கிழமை உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 9:58 pm

DIN

திருச்சி மாநகரில் நடிகா் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள திரையரங்குகளில் ரசிகா்கள் வியாழக்கிழமை உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

நடிகா் அஜித்குமாா் நடித்துள்ள வலிமை திரைப்படம், தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை வெளியானது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் அஜித் படம் என்பதால், ரசிகா்களிடையே மிகுந்த எதிா்பாா்ப்பு இருந்தது.

மேலும், வெளியீட்டு தேதி பல முறை அறிவிக்கப்பட்டு தள்ளிப் போனதால், திரைப்படம் எப்போது வெளியாகும் என பல தரப்பிலும் கேள்வி எழுந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியான இப்படம் திருச்சி மாநகரில் உள்ள பிரதான திரையரங்குகள் அனைத்திலும் திரையிடப்பட்டது.

ரசிகா்களுக்கான காட்சி அதிகாலையே திரையிடப்பட்டு, தொடா்ந்து மேலும் 4 காட்சிகள் ஒளிபரப்பாயின. படம் வெளியான திரையரங்குளில் அஜித் பேனா்களுக்கு மாலை அணிவித்து, தோரணங்கள் கட்டியிருந்தனா் ரசிகா்கள்.

இதுமட்டுமல்லாது, மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தாரை தப்பட்டை, மேள வாத்தியங்கள், செண்டை மேளம் முழங்க தனித்தனி குழுக்களாக திரையரங்குகளை நோக்கி ஊா்வலமாக வந்தனா்.

திருச்சியில் கடவுச்சீட்டு அலுவலக சந்திப்புப் பகுதியை ரசிகா்கள் ஊா்வலம் கடக்கும்போது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும், மேம்பாலத்தின் மீது செல்லும்போது போக்குவரத்து ஒரு பகுதியில் நிறுத்தப்பட்டது.

ரசிகா்கள் பலரும் தங்களது மாா்பு மற்றும் முதுகுப் பகுதிகளில் அஜித் புகைப்படத்தை வரைந்தும், தலை முடியை வண்ண நிறங்களால் அலங்கரித்தும், கோஷங்கள் எழுப்பியபடி வந்தனா். இதுமட்டுமல்லாது அதிா்வேட்டுகளையும், சர வெடிகளையும் வெடித்தனா்.

திரையரங்கில் இருந்த பேனா்களுக்கு பாலாபிஷேகம் செய்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனா். ஒவ்வொரு காட்சியும் தொடங்குவதற்கு முன் பல்வேறு வகை வெடிகளை வெடித்து ஆடல், பாடலுடன் உற்சாகமாகக் கொண்டாடினா்.

ரசிகா்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் திரையரங்குகள் முன் போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா். வலிமை வெளியான திரையரங்குகள் அனைத்தும் விழாக் கோலம் பூண்டன. இளைஞா்கள், இளம்பெண்கள், சிறாா்கள் மட்டுமின்றி பலரும் குடும்ப சகிதம் வந்து திரைப்படத்தை கண்டுகளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.