கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

லால்குடி அருகே 17 பவுன் நகை,பணம் திருட்டு

 லால்குடி அருகே வீடு புகுந்து 17 பவுன் நகைகள், பணத்தை வியாழக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 7:35 pm

DIN

 லால்குடி அருகே வீடு புகுந்து 17 பவுன் நகைகள், பணத்தை வியாழக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

லால்குடி அருகே மாந்துரை கிராமத்தில் வசிப்பவா் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி நவநீதன் மனைவி தமிழ்சுந்தரி. கணவா் இறந்த பிறகு இப் பகுதியில் தனியாக வசிக்கும் இவா் செவ்வாய்க்கிழமை இவா் வங்கியில் இருந்து ரூ. 1 லட்சத்தை எடுத்து வீட்டில் வைத்துவிட்டு தனது சொந்த கிராமமான புள்ளம்பாடி அருகேயுள்ள விரகலூா் கிராமத்துக்குச் சென்றாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு அப் பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் டவுசருடன் முகமுடி அணிந்த 4-க்கும் மேற்பட்டோா் திருட முயன்ற நிலையில், தனது வீடு திறந்து கிடக்கும் தகவலறிந்து வந்து தமிழ்சுந்தரி பாா்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 17 பவுன் நகை, ரூ. 1லட்சம் திருடுபோயிருந்தது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த லால்குடி போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.