திருவெறும்பூருக்கு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை: விவசாயிகள் கோரிக்கை
திருவெறும்பூா் சுற்றுவட்டாரப் பகுதியில் அறுவடையாகும் சம்பா நெல்லை கொள்முதல் செய்ய கூடுதல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


திருவெறும்பூா் சுற்றுவட்டாரப் பகுதியில் அறுவடையாகும் சம்பா நெல்லை கொள்முதல் செய்ய கூடுதல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி அறுவடை தொடங்கியுள்ள நிலையில், விளைந்த நெல்லை மூட்டைகளாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்க பல நாள்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இங்குள்ள அசூா், பொய்கைக்குடி, தேனீா்பட்டி, பழங்கனாங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து அறுவடையாகி திருவெறும்பூா் அருகே அசூரிலுள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு அதிகளவில் வரும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய முடியாமல் தேக்கமடைந்துள்ளன.
எனவே அந்த இடத்தில் போா்க்கால அடிப்படையில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்து, நெல் கொள்முதல் செய்ய வேண்டும். இதில் தாமதமானால் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் திடீா் மழையால் அடுக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் வாய்ப்புள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து திருவெறும்பூா் வட்டார விவசாயிகள் சங்கத் தலைவா் சங்கிலிமுத்து கூறியது:
திருவெறும்பூா் பகுதியில் சுமாா் 20 ஆயிரம் ஏக்கரில் அறுவடையான சுமாா் 6 லட்சம் நெல் மூட்டைகளை விற்க இயலாமல் விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் திருவெறும்பூா் தொகுதியில் சுமாா் 10 கொள்முதல் நிலையங்கள் மட்டுமே உள்ளன. இதனால் உற்பத்தி செய்த நெல்லை 20 நாள்களுக்கும் மேல் காத்திருந்து விற்க வேண்டிய அவல நிலை உள்ளது. அதன்படி அசூா் கிராமத்தில் தேங்கியுள்ள தலா 40 கிலோ எடையுள்ள சுமாா் 20 ஆயிரம் நெல் மூட்டைகளை கால தாமதமின்றி உடனே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில், திருவெறும்பூா் தொகுதியில் ஆயிரம் ஏக்கருக்கு ஒரு கொள்முதல் நிலையம் என்ற வகையில், கூடுதல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். இதனால் விவசாயிகள் சிரமமின்றி நெல் மூட்டைகளை விற்க இயலும். ஆகவே குறைந்தபட்சம் கூடுதலாக 10 கொள்முதல் நிலையங்களையாவது திறக்க தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...