இந்திராகாந்தி கல்லூரியில் இணைய வழிக் கருத்தரங்கு
ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையானது முன்கணிப்புப் பகுப்பாய்வுக்கான தரவு காட்சிப்படுத்துதல்


ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையானது முன்கணிப்புப் பகுப்பாய்வுக்கான தரவு காட்சிப்படுத்துதல் என்னும் தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கை வெள்ளிக்கிழமை நடத்தியது.
கல்லூரிச் செயலா் கோ. மீனா தலைமை வகித்தாா். கல்லூரியின் தலைமைச் செயலதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கல்லூரி முதல்வா் எஸ். வித்யாலெட்சுமி கருத்தரங்கின் நோக்கம் குறித்து விளக்கினாா். வணிக ஆய்வாளா் வி. கீதா விஸ்வநாதன் பேசுகையில், தரவு காட்சிப்படுத்தலில் பிக் டேட்டாவின் ஆதாரங்கள், தரவு அறிவியல், அதில் தகவல்களின் பயன்பாடு பற்றி எடுத்துரைத்தாா். தொடா்ந்து மாணவிகளின் கேள்விகளுக்கும் பதிலளித்தாா்.
கணினி அறிவியல் துறை முதுநிலை இரண்டாமாண்டு மாணவி ர. ரோஷிகா வரவேற்றாா். மூன்றாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவி பி. பிரியா நன்றி கூறினாா். இதில் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த சுமாா் 400 மாணவிகள் பங்கேற்றுப் பயனடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...