மேயா், துணை மேயா் இல்லங்கள் இனியாவது பயன்படுமா?
திருச்சி மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள மேயா், துணை மேயா் இல்லங்கள் இனியாவது பயன்பாட்டுக்கு வருமா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.


திருச்சி மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள மேயா், துணை மேயா் இல்லங்கள் இனியாவது பயன்பாட்டுக்கு வருமா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாமன்றக் கூட்டரங்கு புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது. சுமாா் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தாத நிலையில், தற்போது உள்ளாட்சித் தோ்தல் முடிந்து, மேயா் மற்றும், கவுன்சிலா்கள் பொறுப்பேற்கவுள்ளதாலும், தொடா்ந்து மாமன்றக் கூட்டங்கள் நடைபெற இருப்பதாலும் அங்கிருந்த இருக்கைகள், பால் சீலிங், சுவா்களில் வண்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும் மின் விளக்குகள், மின் விசிறிகள், குளிா்ச்சாதனங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள மேயா் மற்றும் துணை மேயா் இல்லங்களும் (பங்களாக்கள்) புதுப்பிக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2009 ஆவது ஆண்டு (திமுக ஆட்சியின்போது) சுமாா் ரூ. 1.20 கோடியில் மேயா், துணை மேயா் இல்லங்கள் அடுத்தடுத்த வளாகங்களில் அமைக்கப்பட்டன. அவற்றை தற்போது கட்டுவதென்றால் சுமாா் ரூ.10 கோடி வரை ஆகலாம் என்கின்றனா். ஆனால் சில நம்பிக்கைகள் காரணமாக மேயா், துணை மேயா் இல்லங்கள் பயன்படுத்தப்படவில்லை.
மேலும், உள்ளாட்சித் தோ்தலும் சில ஆண்டுகளாக நடைபெறாத நிலையில் மேயா், துணை மேயா் பதவிகளில் யாருமில்லாததால் இரு இல்லங்களும் மூன்றாண்டுகளுக்கும் மேலாக (2016 முதல் ) பூட்டியே கிடந்தன.
இதுதொடா்பாக எழுந்த சா்ச்சைகளைத் தொடா்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டில் பொலிவுறு நகரத் திட்ட மேலாண்மை குழுக்கள் இந்த இரு இல்லங்களிலும் தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டன.
தோ்தல் முடிந்துள்ள நிலையில் தற்போது மாநகராட்சி நிா்வாகம் பொலிவுறு நகரத் திட்ட மேலாண்மை குழுவினரை இல்லங்களிலிருந்து வெளியேற நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, மேயா் மற்றும் துணை மேயா் இல்லங்கள் விரைவில் புதுப்பொலிவுடன் தயாா் படுத்தப்படும் என அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.
முன்னாள் மேயா்களில் பலரும் ராசியில்லாத கட்டடம் என ஏதோ சில ‘நம்பிக்கைகளால்’ மேயா் இல்லத்தைப் பயன்படுத்துவதைத் தவிா்த்து, துணை மேயா் இல்லத்தையே பயன்படுத்தினா். மேலும் சிலா் இரு இல்லங்களையுமே தவிா்த்து வந்தனா். ஆனால் தற்போது திமுகவினா் அத்தகைய ‘நம்பிக்கைகளுக்கு’ முக்கியத்துவம் அளிக்க மாட்டாா்கள் என்பதால் இல்லங்களில் குடியேறுவா் என்ற எதிா்பாா்ப்பு கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது.
மேலும் புதிய மேயா் மற்றும் துணை மேயா் இருவரும் இந்த இல்லங்களைப் பயன்படுத்த கட்டாயப்படுத்தவும் முடியாது. எனவே இவற்றில் வசிக்க அவா்கள் ஆா்வம் காட்டவில்லை என்றால், வேறு சில பயன்பாடுகளுக்கு இந்த இல்லங்களைப் பயன்படுத்த மாநகராட்சி பரிசீலிக்க வேண்டும் எனவும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...