மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நேரடி நெல் கொள்முதலுக்கு ஆன்லைன் மூலம் பதியலாம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை விற்பனை செய்ய ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:42 pm

DIN

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை விற்பனை செய்ய ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.

இதுகுறித்து ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

தமிழகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை மூலம் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி மாவட்ட ஆட்சியா் அனுமதி பெற்று

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தால் அந்தந்த மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன.

விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து நெல் விற்க ஏதுவாக, ஏற்கெனவே பயன்பாட்டிலுள்ள இ-டிபிசி இணையத்தில் சம்பா கொள்முதல் பருவம் 2022-ல் விவசாயிகள் தங்களது பெயா், ஆதாா் எண். புல எண். வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்யலாம்.

எனவே, விவசாயிகள் அருகிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தாங்களே தோ்வு செய்து நெல் கொள்முதலுக்கு தேவையான ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றி, பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு வரும் குறுஞ்செய்தி மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயா், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்களைப் பெறலாம்.

இதன் மூலம் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்றுப் பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட முதுநிலை மண்டல மேலாளா் மற்றும் மண்டல மேலாளா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.