வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு
திருச்சி காந்திசந்தை சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.


திருச்சி காந்திசந்தை சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
கடந்த புரட்டாசி பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி மழையால் சேதமடைந்ததால் தக்காளி விலை கிலோ, ரூ.100 முதல் 180 ரூபாய்க்கு விற்றது. இதனால் பொதுமக்கள் தக்காளி வாங்க முடியாமல் தவித்தனா். இந்நிலையில் திருச்சி பகுதிகளில் உள்ள விவசாயிகள் காா்த்திகைப் பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி தற்போது காய்ப்புக்கு வரத் தொடங்கியுள்ள நிலையில், அண்டை மாவட்டங்களிலிருந்தும் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் திருச்சி காந்தி சந்தையில் தக்காளி விலை கடுமையாகச் சரிந்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன் ரூ. 800-க்கும், 2 நாள்களுக்கு முன் ரூ. 500-க்கும் விலைபோன 13 கிலோ கொண்ட ஒரு டிப்பா் சனிக்கிழமை ரூ. 350 க்கு விலைபோனது. இதனால் தக்காளி கிலோ ரூ. 18 முதல் 19 க்கு சில்லறையில் விற்கப்பட்டது.
இன்னும் இரு வாரங்களில் அறுவடை சீசன் களைகட்டும் என்பதால் தக்காளி வரத்து மேலும் அதிகரித்து, விலையும் அதிகம் சரிய வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...